உம்மை தான் நம்பியிருக்கிறேன்
ummai thaan nambiyirukkiren
உம்மை தான் நம்பியிருக்கிறேன் நீங்க கைவிடவே மாட்டீங்களே - இயேசய்யா (2) கைவிடாத தெய்வம் கரம் பிடிக்கும் கர்த்தர் விடுவிக்கும் தேவன் இரட்சிக்கும் இயேசு (2) - உம்மை
1. தேவையில்லா சிந்தை என்னை நெருக்கி வாட்டுதே உம்மை விட்டு தூரம் போன போலிருக்குதே சுய சிந்தனை மேலோங்கி தோற்று போனேனே உம் கரத்தால் என்னை முற்றும் சேர்த்தணைத்தீரே (2) - கைவிடாத
2. சூழ்நிலைகள் உலக வேஷம் போட வைக்குதே முள்ளின் நடுவே விதைக்கப்பட்ட விதையானேனே (2) கர்த்தருக்காய் கனிகொடுக்க கடினமாகுதே கிருபையால் விடுவித்து உயர்த்துகிறீரே (2) - கைவிடாத
3. தூஷணமும்நிந்தைகளும் ஒடுக்கி போடுதே உறவுகளும் நட்புகளும் விலகி ஓடுதே (2) எட்டுத் திக்கும் இருண்டதாய் காட்சியளிக்குதே வெளிச்சமாய் உதித்து வந்து என்னை மீட்டீரே (2) - கைவிடாத
4. மகிமையின் கர்த்தரை மறக்கும் உலகிலே மாற்றான் போன்ற அனுபவம் எனக்கு வேண்டாமே (2) மறுரூபம் ஆகும் நேரம் வேகம் நெருங்குதே மன்னராய் இயேசு வந்து ஆட்சி செய்வாரே (2) - கைவிடாத
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar