அக்கினி அக்கினி அக்கினி
akkini akkini akkini
அக்கினி (2) அபிஷேக அக்கினி பின்மாரி மழை போல பொழிந்திட்ட அக்கினி (2) பெற்றுக் கொள்ளும் யாவரையும் பெலப்படுத்தும் அக்கினி வல்லமை வரங்களை செயல்படுத்தும் அக்கினி
1. எலியாவின் பலிபீடத்தில் இறங்கின அக்கினி படைக்கப்பட்ட பலிகளை பட்சித்த அக்கினி என் துதி பலி ஏற்றுக் கொள்ள வந்துள்ள அக்கினி சத்துருவின் சூட்சிகளை சுட்டெரிக்கும் அக்கினி (2)
2. மோசே முன்னில் முட்செடியில் கொழுந்துவிட்ட அக்கினி இஸ்ரவேலை மீண்டெடுக்க உடனிருந்த அக்கினி இரவிலே ஸ்தம்பமாக நின்று கொண்ட அக்கினி இந்தியாவை இரட்சிக்க இறங்கிடும் அக்கினி (2)
3. ஐம்பதாம் நாளிலே அசைவாடின அக்கினி அறையில் இருந்தோர் அனைவரையும் நிரப்பிட்ட அக்கினி (2) திருச்சபையை அபிஷேகத்தால் நிரப்பிடுமே அக்கினி (2) ஆதி சபை அனுபவத்தை ஈந்திடும் அக்கினி (2)
4. ஏசாயாவின் உதட்டினை தொட்டிட்ட அக்கினி பாவ அக்கிரமத்தை நிவிர்த்தி செய்த அக்கினி கர்த்தரின் சத்தத்தை கேட்க பண்ணும் அக்கினி சுவிசேஷ வேலையை செய்ய பண்ணும் அக்கினி (2)
More from Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar