உம்மை நம்பி வந்தோம்
ummai nambi vandhom
உம்மை நம்பி வந்தோம்(தேன்) இயேசையா உறங்காமல் காப்பவரே இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு வருபவரே - 2 உம்மை நம்பி வந்தோம்(தேன்) இயேசையா
1. இஸ்ரவேலை காப்பவர் உறங்குவது இல்லையே இஸ்ரவேலை காப்பவர் தூங்குவதில்லையே - 2 எனையும் காப்பவரே இயேசையா கூடவே இருப்பவரே இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
2. மலைபோல் துன்பங்கள் பெருகிடும் போது பனிபோல் கரைத்து போட்டீர் இயேசையா - 2 துன்பங்கள் கலைத்துப் போட்டு இயேசையா கூடவே இருக்கிறீர் இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
3. எத்தனான என்னையும் பக்தனாக மாற்றியது கல்வாரி நேசம் தானே இயேசையா - 2 என்னையும் மன்னித்தீரே இயேசையா கூடவே இருக்கிறீர் இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
4. தூற்றுக்கூடை கையில் உண்டு மணிகளை களத்தில் சேர்ப்பீர் இயேசையா - 2 நானும் உன் களத்தில் சேர இயேசையா கூடவே வருகிறீரே இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
5. உந்தனின் வருகையில் எக்காளம் ஊதுகையில் பரத்தில் கூட்டி சேர்ப்பீர் இயேசையா - 2 என்னையும் தெரிந்துகொண்டீர் இயேசையா என்னோடு கூட வருவீர் இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
6. எத்தனை ஏற்றங்களும்; வாழ்வினில் வந்தாலும் அத்தனையும் மாற்றிடுவீர் இயேசையா - 2 என்னையும் ஏற்றிடுவீர் இயேசையா கூடவே வந்திடுவீர் இயேசையா - 2 அல்லும் பகல் என்னேரமும் என்னோடு இருக்கிறீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae