உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
ummaalae naan oru senaikkul paayven
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலைத்தாண்டுவேன் அநாதி தேவனே நீர் என் அடைக்கலம் நித்திய புயங்கள் எனக்கு ஆதாரம்
உம்மைப் பற்றிக்கொள்வேனே உம்மைச் சார்ந்து கொள்வேனே உம்மைப் பின் தொடர்வேனே உம்மால் ஜெயம் பெறுவேனே
போரடிப்பதற்கு புதிதும் கூர்மையும் பற்களுமுள்ள யந்தரமாகிறேன் மலைகளை நொறுக்க அரண்களை இடிக்க உம் கரம் இருக்க உலகை ஜெயிக்கிறேன்
நான் இளைப்பதும் இல்லை ஓடி களைப்பதும் இல்லை சோர்வடைவதும் இல்லை எதற்கும் பயப்படவில்லை
உன்னதமானவர் மறைவில் இருப்பேன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவேன் வலுச்சர்ப்பங்களை தேள்களை மிதிப்பேன் பால சிங்கத்தையும் மிதித்துப் போடுவேன்
பகல் வெய்யிலாகிலும் இரவின் நிலவாகிலும் சேதப்படுத்தாமலே என்னைக் காக்கிறவர் நீர்
யுத்தத்தில் பட்டயத்தின் வெட்டுக்கு விலக்கி சத்துருவின் தலையை நசுக்கிப் போட்டவர் யுத்த சன்னத்தராய் யோர்தானைக் கடக்க புத்தம் புது பெலனை இன்னமும் ஊற்றுவீர்
உந்தன் வலது கரம் என்னைப் பற்றிப் பிடிக்கும் உந்தன் அக்கினி மதில் என்னைச் சுற்றி இருக்கும்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal