உமக்காகவே உயிர் வாழ்ந்திட
umakkaagavae uyir vaazhndhida
உமக்காகவே உயிர் வாழ்ந்திட - 2 அனுகிரகம் தாருமையா – எனக்கு - 2 எத்தனை பாடுகள் எத்தனை நிந்தைகள் - 2 அனைத்தையும் கடந்திட உம் கிருபை போதுமே - 2
ஆராதிப்பேன் அனுதினமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே - 2
1. நான் செய்த பாவங்கள் சிலுவையை கொடுத்ததே நான் செய்த துரோகங்கள் இரத்தம் சிந்த வைத்ததே - 2 இன்னும் இன்னும் எத்தனை எனக்காக சகித்தீரே - 2 எனக்காக சகித்தீரே
2. உம்மை விட்டு தூரம் போனேன் உம்மை மறந்தே வாழ்ந்தேன் - 2 ஆனாலும் நீர் என்னை கைவிடவே இல்லை - 2 கைவிடவே இல்லை
3. நோயினால் வேதனை வந்திட்ட போதும் பேயினால் சோதனை பெருகிட்ட போதும் - 2 தழும்பினால் சுகம்தந்தீர் சாத்தானை ஜெயித்திடவே - 2 சோதனையை வென்றிடவே
4. நம்பினோர் எல்லாம் கைவிட்ட போதும் நம்மவர் எல்லாம் ஒதுங்கின போதும் - 2 இரட்சிப்பின் தேவனென்னை கைவிடவே இல்லை - 2 மரணத்தின் போதும் என்னோடுயிருப்பீர்
5. மறுஜென்ம முழுக்கினாலே மறுபடி பிறந்திடுவேன் பரிசுத்த ஆவியினால் அபிசேகம் பெற்றிடுவேன் - 2 சபையிலே சாட்சியாக வாழ்ந்திட அருள் செய்வீர் - 2 பரலோகம் பறந்துவர பரிசுத்தம் தந்திடுவீர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae