உம் சமாதானமே கூற
um samaadhaanamae koora
உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! எங்குப் பகைஉண்டோ, அங்கே இயேசுவே உம்அன்பை ஊற்றிடுவேன்! எங்குத் தீமைஉண்டோ, அங்கே என்றும் உம்மன்னிப்பை ஈந்திடுவேன்! எங்கு ஐயம்உண்டோ, அங்கே இனிய நல் விசுவாசம்சேர்த்திடுவேன்!
என் சொந்த நன்மைநான் நாடேன் - பிறர் நன்மைகட் காகவேவாழ்ந்திடுவேன்! என்நிலை பரிந்தோதமாட்டேன் - பிறர் தம்நிலை கண்டுள்ளம்நெகிழ்ந்திடுவேன்! பிறர் அன்புக்காய்ஏங்கமாட்டேன் - அவர் பேரில் என் அன்பைநான் பொழிந்திடுவேன்!
உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! எங்குத் துன்பம்உண்டோ, அங்கே இணையில்லா நம்பிக்கை ஈந்திடுவேன்! எங்கு இருள்உண்டோ, அங்கே இயேசுவே உம்;ஒளிவீசச்செய்வேன்! எங்குத் துயர்;உண்டோ, அங்கே என்றென்றும் இன்பம்நான் சேர்த்திடுவேன்!
உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! மன்னித்து நான்வாழும்போதே - உம் மன்னிப்பைப்பெற்றவனாகிடுவேன்! மற்றவர்க் கீந்திடும் போதே - நான் பெற்று மகிழ்கின்றேன்யாவையுமே! மரணத்தின் மூலமாய்தானே - நான் பிறக்கின்றேன் நித்திய வாழ்வினிலே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal