உலகும் வானம் செய்தாளும்
ulagum vaanam seydhaalum
1. உலகும் வானம் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய் இலகு மருளம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்
2. அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதி முதலெங் கர்த்தனுமாய் தவறிலேசு கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்
3. பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னி மரியிடமாய் உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்
4. பொந்துபிலாத்ததி பதி நாளில் புகலரு பாடுகளை யேற்று உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர் விட்டாரென நம்புகிறேன்
5. இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலே இறந்தோரிட நின்றே உயிரோடு எழுந்தாரெனவும் நம்புகிறேன்
6. சந்தத மோட்சம் எழுந்தருளிச் சருவ வல்ல பரனான எந்தை தன்வல பாரிசமே இருக்கின்றாரென நம்புகிறேன்
7. உயிருள்ளோரை மரித்தோரை உத்தம ஞாயம் தீர்த்திடவே ஜெயமாய்த் திரும்ப வருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
8. பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்த மா பொதுச்சபையும் பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண்டென நம்புகிறேன்
9. பாவ மன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த்தெழு வாரெனவும் ஓவா நித்திய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal