உலகில் பவப் பாரத்தால்
ulagil pavap paarathaal
உலகில் பவப் பாரத்தால் சோரும் - இளைப் பூர்ந்த நரரே, வந்து சேரும்.
அலைசடிப் பட்டவரே, வாரும், - என்றன் ஆறுதலால் அவற்றைத் தீரும்; - பொல்லா - உலகில்
1.பாவி என்றெண்ணித் திகைப் போரும், - என்றன் பாவம் தீராதென் றிருப் போரும், ஆவலாய் ஓடி வந்து சேரும்; - நான் ஆகாமியர்க்காக வந்த தோரும்; - பொல்லா - உலகின்
2.இளமை என்றே எண்ணி, நில்லாதீர், - சாவும் இளமை என்று சொல்லிச் செல்லாதீர்; வளமாய் வருவதைத் தள்ளாதீர்; - கெட்ட வழக்க மிதையே கைக் கொள்ளாதீர். - பொல்லா - உலகில்
3.வாலிப கால மிதில் நாளும் - இன்ப வாழ்வு சுகிக்கவென்று மாளும் சீலரே, இன்றென் னுரை கேளும்; - அவை சேர்க்கும் நரகத்தில் எந்நாளும். - பொல்லா - உலகில்
4.காலம் கடந்த முதியோரே, - வீணாய்க் காலம் கழித்தே உழல்வோரே, காலமே தேட மறந்தோரே, - உங்கள் கவலையைத் தீர்ப்பேன், வருவீரே. - பொல்லா - உலகில்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal