துங்கனில் ஒதுங்குவோம்
thunganil odhunguvom
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்.
கங்குல் பக லும்பரனார் காவல் அரணாதலால் - துங்
1.வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பாரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. - துங்
2.பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். - துங்
3.கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம். - துங்
4.தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும், பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. - துங்
5.பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல், தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக்கொள்வரே. - துங்
6.நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே, வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். - துங்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal