துதி பாடி மகிழ்ந்திடுவோம்
thudhi paadi magizhndhiduvom
துதி பாடி மகிழ்ந்திடுவோம் தூயவரின் நாமத்தை செவி மடித்து கேட்டிடுவோம் தெய்வத்தின் வார்த்தைகளை கரம் தட்டி பாடிடுவோம் கர்த்தரின் கிருபைகளை கருத்துடனே துதித்திடுவோம் கருணை தெய்வம் இயேசுவை... - 2
வாலிபமும் இளவயதும் மாயை அது மாயையே மாவல்ல தேவன் அன்பு என்றும் அது உண்மையே... - 2 திரளான செல்வத்தில் களிகூர்ந்து வாழ்வது போல கர்த்தரின் வேதத்தில் தினமும் நாம் மகிழ்ந்திடுவோம்...- 2
இரட்சிப்பின் பாத்திரத்தை தினமும் நாம் எடுத்துக்கொண்டு இரட்சண்யக் கன்மலையை எந்நாளும் தொழுதிடுவோம்... - 2 காரிருளில் வாழ்பவர்க்கும் கர்த்தரின் அன்பைச் சொல்லி பேரொளியாம் இயேசுவிடம் எந்நாளும் சேர்த்திடுவோம்...- 2
ஆபிரகாம் ஈசாக்கும் யாக்கோபின் தேவன் அவர் தெரிந்து கொண்ட எங்களுக்கும் என்றுமே தெய்வம் அவர்... - 2 தாவீதைப் போல் பாடி தானியேல் போல் துதித்து தரணி எங்கும் அவர் புகழை தாகத்துடன் சொல்லிடுவோம்...-2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu