தோத்திரம் புகழ்
thothiram pugazh
தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதி சொல்லவும் தீதை வெல்லவும் கிருபை சூட்டுவீர் கிறிஸ்தையா கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலா மனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா
1. என் தனை மீட்கநீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் மறை ஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர் எத்தனை பரிவாய் தேவ நீதியும் வினங்கச் செய்து பவமனு ஜாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே நடுவராய் நின்றீரே தீதைஎலாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே ஜெயம் கொண்டீரே நித்ய
2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை விஸ்தரிக்க வரந்தாரும் நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும் நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும் கரம் நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம் சொல்லும் ஐயா தீயோன் தனை வெல்லும் ஐயா தீமைக் கொல்லும் ஐயா துய்யா
3. நித்தியஜீவனைப் பெற்றும் மோடிக்கச் சுத்தி கரித்தென்ன ஆளும் பல நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும் சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உவமைப் போற்றிப் பணிந்தித் தேற்றி எனை அரசாளும் சற்குருவே கிறிஸ்தெனும் சற்குருவே ஜீவன்உள சொற்குருவே நித்தியானந்த நற்குருவே பரப் பொற்குருவே தேவே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal