திருமுகத் தொளிவற்று
thirumugath tholivatru
1.திருமுகத் தொளிவற்று, பெருவினைகளில் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன்; - நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட, ஊக்கம் அருள், பரனே.
2.துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன்; - பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்பாவிக் கிரங் கையனே.
3.பாதகர் மீதில் பரிதபியாமலும், பாவம் பொறாமலும் நீ - சுத்த நீதியை நோக்கில், உனது சமூகத்தில் நிற்பவர் ஆர், துய்யனே?
4.தன் புண்ணி யத்தால் எவனும் மன்னிப்புறத் தக்கவன் இல்லை மெய்யாய்; - எந்தை! உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய் உண்டு பொறுப் பெனக்கே.
5.மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என் வஞ்சக நெஞ்சதனை - நேராய் விண்ணையே நோக்கிடப் பண், இறைவா; உனை வேண்டி மன்றாடுகின்றேன்.
6.மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ மன்னிப்பருள் வதன்றி, - எனக் காறுதலாக உனது நல் ஆவியை அனுக்கிரகித் தாள், பரனே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal