திருமறையின் மொழிகளிலே
thirumaraiyin mozhigalilae
திருமறையின் மொழிகளிலே தேன்வழியும் - அதன் அருள் நிறைந்த உரைகளினால் தீங்கழியும்
அறுபத்து ஆறாகும் அதன் மணிகள் - அவை அழியாத அமுதூறும் சுவை கனிகள் ஒருமித்த நோகொன்றே அவை காட்டும் - இந்த உலகோருக் கென்றென்றும் அருள் கூட்டும்
இறைமைந்தர் இயேசுவையே எடுத்துரைக்கும் - அதன் ஏடுகளில் அவர் பெயரே எதிரொலிக்கும் நிறைவேறும் பாங்கிலவர் வாழ்வடங்கும் - அதில் நிகழ்கால வரலாற்றின் பொருள் விளங்கும்
ஆவியினால் நிறைந்தோராம் அடியார்கள் - அதை அவர் காலச் சூழலிலே வரைந்தார்கள் பூவுலகின் குழல்களின் மறைபேசும் - என்றும் புதுநெறியின் தீபமதாய் ஒளிவீசும்
முறையாகத் திருமறையைப் பயின்றிடுவோம் - அதன் முழுப்பொருளை அறிந்திடவே முயன்றிடுவோம் நிறைவான வாழ்வுதனை அடைந்திடவே - மறை நிழல் படியும் பாதையிலே நடந்திடுவோம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal