தினமும் தியானித்து மகிழ்ந்திடுவோம்
thinamum thiyaanithu magizhndhiduvom
தினமும் தியானித்து மகிழ்ந்திடுவோம் கர்த்தரின் வேதத்தை கருத்துடன் நாம் ஆராய்ந்து
1. கர்த்தரின் வேதத்தில் பிரியமாய் இருந்துமே இரவுபகலாக - 2 அவருடைய வேதத்தை தியானிப்போன் பாக்கியவான் என்றாரே
2. வேதமாம் வெளிச்சத்தில் நடந்திடவே நம்மை இறைவன் அழைத்ததால் - 2 வெளிச்சத்தின்படி நாம் நடந்து ஜீவிப்போம் விண்ணுலகம் சேரவே - 2
3. பாதைக்கு தீபமும் பேதைக்கு ஞானமும் வேதம் ஆகையால் - 2 இருளினிலே நாம் இடறி விழாமல் முடிவுவரை நடப்போம் - 2
4. களங்கமில்லாத ஞானப்பாலாம் திரு வேதம் ஆகையால் - 2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல் தினம் தினம் அருந்திடுவோம் - 2
5. ஆத்மீக ஆகாரம் ஆகும் கர்த்தரின் வேதம் ஆகையால் - 2 ஆத்மீகம் பிழைத்துப் பெலனடைந்திடவே தினம் தினம் புசித்திடுவோம் - 2
6. வேதத்தின் படியே நடந்திடுவோர்கள் உத்தமர்கள் என்றார் - 2 உத்தம மார்க்கத்தாராகவே நாமும் ஒழுங்குடன் நடந்திடுவோம் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan