தினமே நானுனைத்
thinamae naanunaith
தினமே நானுனைத் தேடிப்பணியச் செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.
மனநிலை தவறி மருகினேன் நானே, மாசிலானே அனுகூலநற்! கோனே. - தின
1.அருள் நாயகனெ, அம்பரத் தீசா, ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா, மருள்பவ நாசா, மனுக்குல ராசா, மகிமை யடைந்தமா மகத்துவ நேசா! - தின்
2.செத்தேன், எனக்குன் ஜீவன் அளித்தாய், தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய், முத்தேயென் நன்மைக் காக மரித்தாய், மோதிய தீவினை யாவும் அழித்தாய். - தின
3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய், தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய், கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய், களிப்புடன் பாடிடக் கருணைக்கண் பாராய். - தின
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal