தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
then inimaiyilum yesuvin naamam
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே - அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், (திருச்சபையானோரே) தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுனர் நீமனமே
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி மனமே
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம் - அதைப் பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m BMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal