தேன் இனிமை யதிலும்
then inimai yadhilum
தேன் இனிமை யதிலும் சத்திய வேதம் திவ்யமான மதுரம்.
ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு, நாதனே, அருள் ஆசை அனுதினம் ருசித்திட, - தேன்
1.ஆரணம் அதி புனிதம் களங்கம் இல் லாத சுகிர்த அமுதம்; பூரணமாய் அதைத்தான் உட் கொண்டே வரில், பொன்னுல கதற் கேற்ற தன்மை உண்டாக்குமே. - தேன்
2.பாதைக்குரிய தீபம்; மெய் வேதம் பற்றிடில் மிகு லாபம்; வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர் வரில் அனைத்தும் வெல்லத்தகும் படைக்கல மதே. - தேன்
3.விண்ண தழிந்தாலும், அதோ டிந்த மேதினி ஒழிந்தாலும், திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரகி. - தேன்
4.எத்திசையிலுமுள்ள நரர் யாரும் ஏகன் நின் அறிவு கொள்ள, சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத் தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள். - தேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal