தீயன் ஆயினேன்
theeyan aayinen
தீயன் ஆயினேன், ஐயா, எளியேன் உற்ற தீவினை அனைத்தும் தீரும்; தேவரீர் மேலே என் பாரம், தீயன் ஆயினேன், ஐயா
மாயவலை வீசுவலு பேயின் வினை தீர, நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா - தீய
1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே; என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே; எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் - தீய
2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற் சீவ பாதையைத் தாவி ஓடியே, ஆவலாய் அழி வுறும் துர்ச் சாவின் வழியே தொடர்ந்து அக்கிரமச் செய்கைகளில் சிக்கினேன்; ஐயா, உன் தஞ்சம்! - தீய
3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர வாதியாய் உறு நீதம் உண்டென, போதம் உற வேத நெறி ஓதிய ஏசு நாதா, உன் புண்ணியத்தால் என்னை உய்யப் பண்ணிடக் கிருபை செய்வாய் - தீய
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal