தருணமே பரம சரீரியெனைத்
tharunamae parama sareeriyenaith
தருணமே பரம சரீரியெனைத் தாங்கி யருள் கருணை வாரி.
உரிமையடி யரனுசாரியுயர் எருசலை நகரதிகாரி அதி - தருண
1. வரரடி தொழும் வெகுமானி பரன் மகிமை யொளிர் தேவசமானி நரர்பிணை யொரு பிரதானி யேசு நாயகனென திச மானி அதி. - தருண
2. ஆதார முன்னையன்றி யாரே யெனக் கன் பாய்த்திருக் கண்கொண்டு பாரே பாதார விந்தங் கதிசேரே இசரேல் பார்த்தி பன்றவிது வங்கிஷ வேரே - அதி - தருண
3. நித்த நித்தமாக வெந்தன் மேலே வருவ தெத்தனை துன்பங்களொருக் காலே அத்தனையு நீக்கு தற்குன் காலே யெனக் குத்தம துணைதான் மனுவேலே - அதி - தருண
4. கங்குல் பகலுந்துயரங் கோவே மனக் கலக்க மொழித் தெனைத் தற்காவே பங்கெனங்குத் தந்த மெய் மன்னாவே யேழைப் பாவியை யிரட்சியு மேசுதேவே - அதி - தருண
5. ஐயாவுனக் கடிமை நானே யெனை யாண்ட பரா பரனீ தானே மெய்யாயனுக் கிரகஞ் செய்கோனே கவி வேதநாயகன் மெத்தச் சொன்னானே அதி - தருண
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal