தருணம் இதில்
tharunam idhil
தருணம் இதில் யேசுபரனே! - உமதாவி தரவேணுமே சுவாமீ!
அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. - தருணம்
1.விந்தை, ஞானம், அறிவு வேத சத்தியங்களில் மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச் சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும் சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. - தருணம்
2.பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப் பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச் சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும் மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. - தருணம்
3.ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து, மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. - தருணம்
4.ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட, வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. - தருணம்
5.மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத் தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. - தருணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal