தகுதியோ எனக்கு ஏதுமில்லை!
thagudhiyo enakku edhumillai!
தகுதியோ எனக்கு ஏதுமில்லை! தரமுடையேனோ இல்லை இல்லை! மிகுதியாய்ப் பாவம் புரிந்த இப்பாவி மீட்பினைப் பெற்றிட முடியுமா சுவாமி?
இருக்கின்ற நிலையோடே வருகின்றேன் ஐயா! - உம் திருச்சிலுவை அருள்நாடி அணைகின்றேன் ஐயா!
1. உலகத்தின் பவமெல்லாம் சுமக்க நீர் வந்ததால் ஒருபாவம் அறியாத பலியாடும் ஆனதால் - இருக்கின்ற
2. சொந்தநல் உதிரத்தை அன்புடன் எனக்காய் சொரிந்து நீர் என்னை அழைக்கிறீர் ஆதலால் - இருக்கின்ற
3. ஆயிரம் எண்ணத்தால் அலைப்புண்டு அமிழும்நான் ஐயத்தால் அச்சத்தால் அஞ்சியே சாகும்நான் - இருக்கின்ற
4. வறியனாய் வாட்டங்கள் உடையவனாய் வருகின்றேன் வாழ்வருள்வோர் உமையன்றி மற்றோரைக் காண்கிலேன்! - இருக்கின்ற
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal