தாரகமே பசிதாகத்துடன்
thaaragamae pasidhaagathudan
தாரகமே, - பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாறேன்.
சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். - தார
1.பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர்; - பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர்; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள - தார
2.காணாதொழிந்த ஆடு வீணாய்ப்போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்; - அது பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப் பேருல குதித்தேனென்றீர்; வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன் மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். - தார
3.தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம் தகமை எத்தனமாமே; - யான் சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத் தேவசுத்தாவி தாமே; உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான் சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! - தார
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal