தான்தானாக நிற்கச் சகல
thaandhaanaaga nirkas sagala
தான்தானாக நிற்கச் சகலந் தன்னாலே நிற்கச் சச்சிதானந்த வெளியினித்திய மகத்துவமாக
1.நான்தா னென்றுரைக்க நானுமில்லை நீயுமில்லை நாமமில்லை ரூபமில்லை நச்சடங்க ளொன்றுமில்லை
2. ஏன்தான் தற்கமதம் வீண் சாத்திரப்பிரட்டல் ஏட்டையுங் கிழித்தெறிந்து போட்டெரி வளர்த்துப் போட்டு
3. தானவன்றானதாகச் சருவ வியாபியாகத் தற்சுய சொரூபமாக அர்ச்சயத் தரூபமாக
4. தானவனாக நிற்கத் தானே தானாகநிற்கத் தன்னிலே தானாக நிற்கத் தனக்குந் தானாகநிற்க
5. வன்மையின் வளங்களோங்கித் துன்மையும் புன்மையுமின்றி நன்மையுந் தயவுமிக்க உண்மையிலுண்மையுமாக
6. ஞானமு மளவில்லாத மானமு மொரேயொரு நி தானமுமுடையதாக வீனமுங் குறையுமின்றி
7. அண்டமு மகண்ட பகிரண்டமுங் கடந்துபர மண்டலங்களுங் கொளாதோர் கண்டசீர தாயெந்நாளும்
8. துத்திய குணங்களெட்டின் பத்திலட்சணங்களுள்ள சத்திய பரிசுத்ததி னித்திய வஸ்துவதாக
9. பேதமில்லையே யைம்பூதமில்லையே யொரு தீதுமில்லையே செகச்சூதுமில்லை வாதுமில்லை
10. ஊருமில்லையே சொல்லப் பேருமில்லையே யொப் பாருமில்லையே யெதிர்த்தாருமில்லைப் போருமில்லை
11. அங்கமில்லையே யவசங்கமில்லையே துற்க ளங்கமில்லையே சற்றும் பங்கமில்லை லிங்கமில்லை
12. அரியரன் றானுமல்ல அயனுமற்றாரு மல்ல ஆணுமல்லப் பெண்ணுமல்ல அப்புறத்திலேதுமல்ல
13. பஞ்சந்திரியங்களன்றிப் பஞ்சாட்சரங்களன்றி பஞ்சவன்னம் பஞ்சபூதம் பஞ்சகத்தாக்களுமன்றி
14. வேதச் சமயந்தேட வேதாந்த கீதம்பாட வேதாட்சரங்கணீட வேதநாயகன் கொண்டாட
15. தானவன் தானதாக சருவ வியாபியாக தற் சுயச் சொரூபமாக அர்சயத்தரூபமாக தான் அவனாக நிற்க தானே தானாக நிற்க தன்னிலே தானாக நிற்கத் தனக்கு தானாக நிற்க
16. ஏன்தான் தற்க மதம் வீண் சாஸ்திரப் பிரட்டல் ஏட்டையுங் கிழித்தெரிந்து போட்டெரிவளர்த்துப் போட்டு நன்மையின் வளங்களோங்கி துன்மையும் புன்மையுமின்றி நன்மையும் தயவுமிக்க உண்மையில் உண்மையுமாக
17. வேதமில்லை ஐம் பூதமில்லையே ஒரு தீதுமில்லையே ஜெக சூதுமில்லை வாதுமில்லை ஊருமில்லை சொல்லப் பேருமில்லையே - யொப் பாருமில்லையே யெதிர்தாருமில்லை போருமில்லை
18. துத்திய குணங்கள் எட்டின் பத்து லட்சணங்களுக்கு சத்திய பரிசுத்ததி நித்திய வஸ்துவதாக வேதச் சமயம் வேதாந்த கீதம் பாட வேதாசரண்கள் நீட வேதநாயகன் கொண்டாடதான் தான்
19. புகழ்மிக்க எட்டு குணங்களும் பத்து இலட்சணங்களும் உடைய சத்திய பரிசுத்த நித்திய தெய்வமே அனைத்து சமய கீதங்களும் நூல்களும் போற்றும் வேதத்தின் நாயகன் நீரே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal