தாகம் மிகுந்தவரே
thaagam migundhavarae
தாகம் மிகுந்தவரே, அமர்ந்த தண்ணீரண்டை வாரும் - ஒ!
1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே, - நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம், வேண்டியதைத் தருவேன். - ஓ!
2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே, - விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே. - ஓ!
3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே, - வாரும், நேரே, உமக்கிளைப் பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன். - ஓ!
4.அப்பமல்லாத எதனையும் திருப்தி அளித்திடாப் பொருளையும், - நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம் தன்னையுமேன் கெடுப்பீர்? - ஓ!
5.கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில் கண்டிடுமே உடனே; - உந்தன் அத்தன் சமீபமாக இருக்கும் போதே ஆவலாய்க் கூப்பிடுமே. - ஓ!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal