சுத்தபரன் சுத்த ஆவியே
suthabaran sutha aaviyae
சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை சொல்லவரம் எனக்கீவையே.
மெத்தவும் அசுத்தன் நானே மேவினேன் நின் பாதந்தானே, உத்தமனம் கெஞ்சுவேனே, உன்னையல்லா லழிவேனே
1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்ம மீட்பர் அருளைப் பெறவும் போகுமோ? மிடியுறும் ஏழைமக்கள் தான் மனந்திரும்பி விசுவாசங் கொள்ளலாகுமோ? கடினம் என் மனங்கல்லு, கத்தா ஓர் வார்த்தை சொல்லு, திடசீவன் வரக்கொல்லு, சேவடி நீ சேர்த்துக்கொள்ளு.
2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும் சுகிர்தந்தனை யானறிந்தேன், உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக் கொளிதருவதை யுணர்ந்தேன். அவமாகா மெய்விஸ்வாசம், அதனால் தூய்மை நன்னேசம், கவர்ந்துனைத் தொழும்பாசம், கனிந்தளித்தாய் நல்வாசம்
3.பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப் பொற்புற விணைத்துச் சேர்த்துச் சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு தற்பரனில் நித்தங்காத்து. சேமகரஞ்செய்யும் நேயா, தின்மையைப் பகைக்குந் தூயா, பாமரர்க்கு நற்சகாயா, பார்த்திபா என்றென்றும் மாயா.
4.நித்தியமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில் நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச் செத்த விசுவாசிகளையும் என்னையும் உடல் ஜீவனோடெழுப்புவாய் இன்பாய். நித்திய ஜீவன் தருவாய், நின்மலன் யேசுவை மெய்யாய்ப் பத்தியாகவே மனம்வாய் பற்றினோர்க்கு மா தயவாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal