ஸ்தோத்திரிப்பேன் தூயவரே
sthothirippen thooyavarae
ஸ்தோத்திரிப்பேன் தூயவரே உமது அன்பு நித்தம் நினைத்து அன்னியனாக அலைந்த என்னை அன்பினாலே சந்தித்தீரே 2 - ஸ்தோ
1. பார்தலத்தில் பரிதபித்த பாவி என்னை தேடி வந்தீர் -2 பாவபாரம் நீக்கி என்னை இரட்சித்தீர் கிருபையால் -2
2. உமது திரு இரத்தத்தால் பாவம் அற எனை கழுவி -2 பாதகனாய திரிந்த என்னை செந்தமாக்கி தீர்த்ததினால் -2
3. புத்திர சுவீகாரம் ஆவியினால் அபிஷேகித்து -2 புத்திரனாக ஆக்கித் தீர்த்தீர் பிதாவே என்று !அழைத்திடவே -2
4. சோதனைகள் சூழும்போது துணைவரைத் தவமிருந்து -2 ஆபத்துகள் அணுகிடாமல் அல்பகலாய்ப் பாதுகாத்தீர் -2
5. துன்பத்தில் தாக்கப்பட்டு சோர்வடைந்து தயங்கும் வேலை -2 சகாயராஜ் வெளிப்பட்டு பலப்படுத்தி பாதுகாத்தார் -2
6. உலகத்தில் நான் ஜெயித்து திடன் கொள்ளுங்கள் என்றுரைத்தீரே -2 உலகத்தை ஜெயித்திடவே உமது திரு வல்லமையால் -2
7. உத்தமனாய் முடிவுவரை நிலைநிற்க அருள்புரிவார் -2 உமது திரு அடிச்சுவடை தொடர்ந்திடவே அருள் புரிவீர் -2
8. விசுவாசமாய் இருந்திடவே சொல்லி போன என் பிதாவே -2 விசுவாசத்தில் நிலைத்திருக்க அருள்புரிவார் முடிவுவரை -2
9. அல்பகலாய் தியானிக்க உமது திரு வார்த்தைகளை -2 வரைந்து தந்தீர் வார்த்தைகளை வாக்குமாறா வள்ளலே நீர் -2
10. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! திரு நாமத்திற்கே ! -2 அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென்! ஆமென்! -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan