சூரியன் அஸ்தமித்து
sooriyan asthamithu
சூரியன் அஸ்தமித் திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள் - உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே
இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். - சூரி
1.பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். - சூரி
2.இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்! அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம். - சூரி
3.எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய், விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய், வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய், பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய். - சூரி
4.சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ? வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல, உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே, கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே. - சூரி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal