சொல்லரும் மெய்ஞ்ஞானரே
sollarum meygngnaanarae
சொல்லரு மெஞ் ஞானரே மேன்மைப்பிரபுவே சொருபத் தருபக்கோனாரே உரை.
வல்லறஞ் சிறந்து மனுவானாரே மணி இல்லறந்துறந்து குடிலானாரே - உரை சொல்
1.மாடாயர் தேடும் வஸ்து தற்காரி கேடாளர் நாடும் கிறிஸ்து சற்காரி வையகம் புரப்பதற்கு வந்தாரே அருள் பெய்து நவமுந் தவமுந் தந்தாரே - உரை சொல்
2. அட்சய சவுந்தர அசரிரீ அதி உச்சித சுதந்தர உபகாரி ஐயா வல்லாவே மாதேவா ஓ துய்யா நல்லாவே சேயோவா - உரை சொல்
3. சாஸ்திரர் காணிக்கை கொண்டு கண்டாரே மிகத் தோத்தரித் தடர்ந்து புகழ் விண்டாரே சம்மன செலாந்தொழ நின்றாரேவலு துன்மனசெலாம் விழச் சென்றாரே - உரை சொல்
4. பாவவினை யாவையுந் தீர்த்தாரே யுயர் தேவகுலமா யெமைச் சேர்த்தாரே பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே பெரும் பொக்கிஷம் போலெமைக் காத்தாரே - உரை சொல்
5. தந்திரக் கணத்தை வெட்டிப்போட்டாரே தம் சுந்திரச் சனத்தைக்கிட்டி மீட்டாரே சொந்தடிமையைத் தள்ளமாட்டாரே சந்தேகம தோசொல்லும் நாட்டாரே - உரை சொல்
6. அங்கிஷத்தவிதரசன் செங்கோலேயூதர் வங்கிஷத்திரள்பணியும் நன்காலே அட்சய அட்சய திவ்விய மன்னாவேஎமை இரட்சியும் இரட்சியும் ஓசன்னாவே - உரை சொல்
7. தாவீது ராஜனின் மைந்தாவேதமிழ் பாவேத நாயகன் சொந்தாவே சந்ததம் சந்ததம் பொங்கார்த்தனமே லட்சம் வந்தன வந்தனம் சங்கீர்த்தனமே - உரை சொல்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal