சிந்தைசெய்யும் எனில்
sindhaiseyyum enil
சிந்தைசெய்யும் எனில் நிரம்புவீர், தேவாவி உமைச் சிந்தைசெய்யும் என்னை நிரப்புவீர்
தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர். - சிந்தை
1. பாலனாய்ப் பரமதந்தைக்கும் - அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் - அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர். - சிந்தை
2. திரியேகதேவனே என்றே - அவரைவிட்டுப் பிரியேன் என் பிராணன்போனாலும், அரிய அவரின் தயையே - எனக்கு என்றும் உரிய ஒன்றான பொருளே, பொய், லோகம், மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும் மெய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனக்கென்றும். - சிந்தை
3. பக்தியுள்ள ஜீவியம் செய்து, - பகலின் சேயாய் எத்திசையினும் விளங்கிடச் சுத்தமனம் செய்கையைத்தாரும் - எனைநான் என்றும் தத்தம்செய்யக் கற்பித்தருளும், உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும் என்னகத்தினின்றும் துதிஏறுவதாக, ஆமென். - சிந்தை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal