சிலுவை சுமந்த கோலம்
siluvai sumandha kolam
சிலுவை சுமந்த கோலம் - மனித இதயம் நொறுக்கும் கோலம் மனதை உருக்கும் கோலம்
என் தேவன் என் நாதன் என் ஜீவன் என் நேசன்
தாழ்மையின் கோலம் அடிமையின் கோலமாக புவிமீதில் வந்த தேவன் - 2 என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் சொந்தம் - 2
ஈன சிலுவை சுமந்தார் ஈன பாடுகள் பட்டார் ஈனப் பாவியை மீட்டார் - 2 புது ஜீவன் புது வாழ்வு புது நாமம் புது ராஜிய மீந்தார் - 2
கோரப் பாடுகள் பட்டார் கொடிய வாதைகள் அடைந்தார் கொல்கொதா மேட்டில் மாண்டார் - 2 என் மீட்பர் என் மேய்ப்பர் என் துணைவர் என் மகிபர்
மரணத்தை வென்ற வீரன் தருணத்தை ஈந்த வீரன் அலகையைக் கொன்ற வீரன் - 2 என்னுபகாரி என் பரிகாரி என் தலையாரி என் அதிகாரி - 2
பாதாளம் தனில் இறங்கி வேதாளம் தனைக்கொன்று உன்னதம் தனில் சென்றார் - 2 சொர்க்கமதில் என்னைச் சேர்க்க மீண்டும் வருவார் அதி சீக்கிரம் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan