சேனைகளின் கர்த்தரே
senaigalin kartharae
சேனைகளின் கர்த்தரே! நின் திருவிலம் அளவற இனிதினிதே!
வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத. - சேனை
1.திருவருளிலமே, கணுறும் உணரும் தெருளம்பகமே, இனிதுறும் நிசமிது. - சேனை
2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே, இனிதே! இகபர நலமொளிர் இதமிகு பெயருள எமதரசெனும் நய. - சேனை
3.புவியோர் பதிவான் புகநிதியே! புனருயி ருறுமுழுக் கருளினிதே! புதுவிடமே, புகுமனமே, புதுமதியே! புரிவொடு இனிதருள்! - சேனை
4.பேயொடே புவி பேதை மாமிசம் பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே; யெனச்சொலி பேணிடத்துணை ஈவையே! பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் பிசகொழியே, திடமளியே! பெருமலைரயினிலரு முயிர் தரும். - சேனை
5.ஆலய மது நிறைவாக, அவைக் குறைவொழிந்தேக, அவரவருனதில மெனமன விடர்சாக, அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும், ஆலய பர னேச, ஆசுக மது வீச, ஆரண மொழி பேச, ஆ புது எருசலையாம் ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது? - சேனை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal