சீரேசு பாலன் ஜெயமனு
seeresu paalan jeyamanu
சீரேசு பாலன் ஜெயமனு வேலன் சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன், தாராள மாகத் தாமே மனுவான --- சீரேசு
1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக மண்ணி லேகின மாட்சிமை யாலே, விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? --- சீரேசு
2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை இந்நிலத்தினில் எழில்சமா தானம், மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? --- சீரேசு
3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே, கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க தீபமாய் வந்த தேவமைந்தனான --- சீரேசு
4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும் சித்தம் உருகிச் சீர்கூற வேணும், அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்; பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் --- சீரேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal