சர்வவல் லமையும்
sarvaval lamaiyum
1. சர்வவல் லமையும் சரிநிகர் பரிவும் சங்கம மாகியஎந்தாய், அர்ப்பராய் வாழ்ந்தோம் அருணெறி தவறி அலைகிற ஆடுபோல் ஆனோம், கர்வமே கொண்டுன் கற்பனை களையே கைதவறிக் குற்றம் புரிந்தோம் கர்த்தனே எங்கள் அத்தனே அரசே கடைகணித் தருளவே வேண்டும்.
2. செய்யத்தக செய்யத் தவறினோம் அந்தோ செயத்தக பலபல செய்தோம் உயத்தகு நெறியே உன்மகன் அன்றி ஒருநெறி இல்லையே,எங்கும் இயங்கிடும் கிறிஸ்து இயேசுவின் மூலம் எங்களைப் பொறுத்தருள் செய்து மயக்கறுத் தெம்மன மாசுகள் போக்கி மன்னியும் மன்னியும் இரங்கி.
3. குற்றமே புரிந்து குறைபடும் எமையே குறைகளைக் களைந்துசீர் செய்தே இற்றைநாள் எந்தாய் எப்படி யாயினும் எங்களுக் கிரங்கிட வேண்டும் பற்றிய உனதுபரிசுத்த பெயர்க்கே உற்றவா றொழுகிட அருள்வாய் வெற்றிசேர் கிறிஸ்து இயேசுவின் மூலம் வேண்டிவ ணங்கினோம்,ஆமென்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal