சருவேசுரா ஏழைப்பாவ
saruvesuraa ezhaippaava
சருவேசுரா, ஏழைப்பாவி - என் பேரிலே தயவாய் இரும், சுவாமி
திரியேக பரதேவா, நெறி மேவும் ஒரு யோவா, சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து - சரு
1.தந்தை நின் ஒன்றான மைந்தன்தனைக் கொடுத்தித் தகமையுலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபைதனைச் சிந்தித்துணர மறை தொகுத் தெனக்குப தேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளிவதாக்கும் எந்தப் படியும் என்னிற் பந்த மனைத்தும் போக்கும்
2.தேவரீர்க் கேராத தீவினகளைச் செய்தும் தெண்டியாமற் பொறுத்தீர் நீர் யாவு மறிந்திருந்துங் கோபித்துக் கைவிடாதென் நன்றிக் கேட்டை மறுத்தீர் சீவனே யுமக்குப் பாவி வதிளென் செய்வேன் மேவியடி தொழாமல் ஆவியெங்ஙன முய்வேன்
3.நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமெனுமில்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக் கேற்க நடந்தேன் பஞ்சபாவிக் கூவிக் கெஞ்சும் செபத்தைக்கேளும் அஞ்சல் புரிந்து திருச் செஞ்சரணந் தந்தாளும்
4. ஒன்றுமில்லாத காலத்தன் றுலகமனைத்தும் உண்டு செய்த வல்லவனே பல நன்று கோடியெனக் கென்று படைத்து நிதம் நல்கும் ஒரு நல்லவனே வென்றி மறந்துன் தயை குன்றுந் துரோகி எனைப் பன்றியென நினைந்து கொன்றிடாய் சினந்து
5. புங்கமிகும் வானோர்கள் சங்கமடிபணிந்து போற்றும் பரம தந்தையே நெல்லை தங்கும் வேதநாயகன் மங்களங்கள் பாடிச் சாற்ற மனம் மகிழ்ந்தையே யெங்கும் நிறைந்திலங்கும் துங்கப் பரமசோதி பங்கிலிருந் தெனக்கி ரங்குஞ் சருவநீதி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal