சருவ லோகாதிபா நமஸ்காரம்
saruva logaadhibaa namaskaaram
சருவ லோகாதிபா நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்! தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம்
திரு அவதாரா நமஸ்காரம் ஜெகத் திரட்சகனே நமஸ்காரம் தரணியின் மனுடா உயிரடைந்தோங்க தருவினில் மாண்டோய் நமஸ்காரம்
பரிசுத்த ஆவி நமஸ்காரம்! பரம சற்குருவே நமஸ்காரம்! அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரியசித்தே சதா நமஸ்காரம்
முத்தொழிலோனே நமஸ்காரம் மூன்றிலொன்றோனே நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தர் கருணா சமுத்திரா நித்ய திரியேகா நமஸ்காரம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am Dm C F Bb F Gm C F F F Am Dm C F Bb F Gm C F F F Am Dm C F Bb F Gm C F F F Am Dm C F Bb F Gm C F
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal