சந்தத மங்கள மங்களமே
sandhadha mangala mangalamae
சந்தத மங்கள மங்களமே சந்தத மங்கள மங்களமே
அந்த மாதி யிலானருள் சேயா எந்தை யேசுக்கிறிஸ்து சகாயா. - சந்தத
1. ஆறு சாடி அயமது வாகவே வேறுசெய் கலிலேய வினோதா மாறிலாமலிம் மன்றல் செழிக்க நற் பேறு தந்தருளாய் பிரதாபா. - சந்தத
2. அந்தரம் பரம்பூமி யடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா இந்த நாள் மணஞ் செய்யுமிவர்க்கருள் தந்துனாசிடை சாற்றுந் தயாபா. - சந்தத
3. வையமுற்ற மணவரைப் பந்தலி லையனே யுன்னருள் கொடு வந்திருந் துய்ய வைங் குறியாலுமு வந்தருள் செய்யுமேக திரித்துவ தேவா. - சந்தத
4. கர்த்தனே கருணைக் கடலேயுயர் பெத்தலைப் பிரதாப விசேடா புத்திரர் பெறவும் புகழோங்கவுஞ் சித்தம் வைத்திம் மணர்க்கருள் தேவா. - சந்தத
5. வேதநாயகன் பாடற்கு மங்களம் விமலனாஞ் சருவேசற்கு மங்களம் ஏதமற்ற வரூபிக்கு மங்களம் யேசுநாத சுவாமிக்கு மங்களம்.- சந்தத
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal