சமயமிது நல்லசமயம்
samayamidhu nallasamayam
சமயமிது நல்லசமயம், உமதாவி தரவேணுமே சாமி.
அமையுஞ் சத்துவங்குன்றி, அருள்ஞானத் துயிரின்றி, அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும் அடியன்மீ தனல்மூட்டி யுயிர்தர, - சம
1.யேசுகிறிஸ்து வின்மேல் நேசம் பத்தியும்விசு வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே; வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலைமூட்டி மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக் கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட, - சம
2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ? தவனம் ஞானாமுதின்மேல் சற்றுமில்லாததேனோ? தந்தையேயுயிர் தந்தெனைத்தாங்கிட உந்தயையினுற் சாகநல்லாவியை, - சம.
3.ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத் தாளம்போல ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை, தாக்குள் ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப எசேக்கியேலுரை வாக்கிலுயிரருள் போக்கியே செய்த ஆவியே இங்ஙனம், - சம.
4.பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று உந்தனாவியினைப் பொழிந்தபி ஷேகஞ் செய்த விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள்முற்றும் வேதனே உமதருளி னுயிர்பெறப் பூதலர் உமைப் போற்றநின் சேயராய். - சம
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal