சாரோனின் ரோஜாவே என் லீலி
saaronin rojaavae en leeli
சாரோனின் ரோஜாவே என் லீலி புஷ்பமே மருதோன்றிப் பூங்கொத்தே என் மணவாளரே-2 உம் கரம் பிடிக்க காத்திருக்கும் கன்னிகை நானே என் மனமகிழ்ச்சியாயிருக்கும் நேசர் நீர்தானே-2
கண்ணே மணியே என்று கைகளில் அள்ளிக்கொண்டு ரூபவதியே என்று சேர்த்தணைத்தாரே என் எல்லா குறைகளையும் தீர்த்து வைத்தாரே-2 நான் மணவாளன் இயேசுவுக்கு சொந்தமல்லவோ அவர் எனையாளும் ராஜாதி ராஜனல்லவோ-2
அன்பின் சிறைகளுக்குள் கட்டி இழுத்துக்கொண்டு உள்ளம் கவர்ந்து எந்தன் கரம் பிடித்தாரே என்னை உள்ளங்கையில் வரைந்து குரல் கொடுத்தாரே-2 என் பெயர் சொல்லி அழைத்திருக்கும் நேசரல்லவோ நான் அவர்க்குள்ளே பிழைத்திருக்கும் தாசனல்லவோ-2
கற்புள்ள கன்னிகையாய் ஒப்புக்கொடுக்கப் பட்டேன் காலம் வரும் வரைக்கும் காத்திருப்பேனே இயேசு காட்சி கொடுக்கும் வரை பார்த்திருப்பேனே-2 என் இதய சிங்காசனத்தில் இயேசு ராஜாவே பொன் உதய விடியலைப் போல் வீற்றிருப்பாரே-2
ஆத்தும நேசர் அவர் ஆலய தேவன் அவர் இயேசு என்னும் இனிய நாமம் உள்ளவர் என் எல்லா எல்லைகளிலும் நிறைந்திருப்பவர்-2 என்னைப் பரலோகம் கொண்டு செல்லும் வழியானவர் இந்தப் பரதேசிக்காக அன்று பழியானவர்-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal