புத்தியாய் நடந்து
puthiyaay nadandhu
புத்தியாய் நடந்து வாருங்கள்; - திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்.
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி
1.ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? - திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்; சீருடைய தெய்வப் பிள்ளைகள் - நீங்கள்; ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி
2.ஆவியை அடக்காதிருங்கள்; - மறை சொல்லுவதை அசட்டை செய்யாமல் பாருங்கள்; ஜீவனை அடையத் தேடுங்கள்; - யேசு கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்; மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் - புத்தி
3.ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் - துதித்துப் போற்றி, இன்பமாய்ச் சத்திய வேதத்தை வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் - பிடித்துளத்தில் வைத்துக்கொண்டு இவ்வுலகத்தை நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம் ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி
4.பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள் எல்லாரும் பரன் மகன் தேட்டம் அல்லவோ? தரிசிக்க நாட்டம் அல்லவோ? - கிறிஸ்தின் உள்ளம் தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ? பரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக் கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் - புத்தி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal