போசனந்தா னுமுண்டோ
posanandhaa numundo
போசனந்தா னுமுண்டோ - திருராப் போசனம் போலுலகில்?
ராசரும் வையக நீசரும் அம்பரன் நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் - போசனம்
1.கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்; கண்மிகட் கானமெய் நேசத்தின் போசனம்; பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்; பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். - போசனம்
2.பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்; பொன் வானதூதரும் உண்ணாத போசனம்; ஓர் காலமும் குறைவாகாத போசனம்; ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். - போசனம்
3.பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்; பாவி புசிக்கும் சமாதான போசனம்; நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்; நின்மலன் தந்திடும் அற்புத போசனம். - போசனம்
4.மாமலைப் பீடப் பலியான போசனம்; மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்; ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்; அத்தனார் மெய்மொழியாலான போசனம். - போசனம்
5.மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்; வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்; பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்; பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம். - போசனம்
6.ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்; ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்; தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்; சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம். - போசனம்
7.செத்தும் உயிரோ டெழுப்பிடும் போசனம்; சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்; நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்; நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம். - போசனம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal