பூமியின் குடிகளே
poomiyin kudigalae
பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசு சாமியினன்னாமமதிலே மகிழுவீர்.
ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை உருக்கமாய்த் - தங்கருணைப் பெருக்கமாய் - மீட்டரணாந் துருக்கமாய் - இதுவரைக்கும் நெருக்கமாய் - ஊக்கமாய்நின்றார். - பூமி
1.தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத் தந்துமா நிர்ப்பந்தமற விந்தையாகவே, இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச் சிந்தையில் நினைந்து முழு நன்றியாகவே, சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ? தாசரே - யேசுநாதர் நேசரே, - எருசலேம் வாசரே, - கர்த்தருக்குள்ளாம் ராசரே, - ஆசாரிமாரே! - பூமி
2.கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற சத்தியத்தை எத்தினமும் உற்றுணருவீர்; அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்வமெனச் சொற்றவரே விக்கிரகப் பத்தியகல்வீர்; இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண் ணோக்கினார், - எங்கள்பவம் போக்கினார், - சகலதுன்பம் நீக்கினார், - தமதுமந்தை ஆக்கினார், - தூக்கினாரென்று. - பூமி
3.ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம், துதியோ டாவியுடனே நமது நாவுமிசைந்து தேவ பிரகாரங்களிலே வருவோமே, புகழ்ச்சி மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து பாவலர் மற்றோரேநல்ல நாவலரே கர்த்தர்வீட்டுக் கோடுவோம், - அவர்நாமத்தில் கூடுவோம், - அவர்பதத்தை நாடுவோம், - அவர்மகிமை தேடுவோம், - பாடுவோம் துதி. - பூமி
4.வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை உள்ள தூழி ஊழிகாலம், தொல்லையுண்டுமோ? சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள் எல்லாவற்றிலு மெங்களுக் கல்லலண்டுமோ? புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம் பிடிக்கிறோம், - சத்தியத்தைப் படிக்கிறோம், - பேயரங்கம் இடிக்கிறோம், - அவனையெங்கும் அடிக்கிறோம், - சீக்கிரம் ஜெயம். - பூமி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal