பொன்னோ மணியோ தேவையில்லை
ponno maniyo thevaiyillai
பொன்னோ மணியோ தேவையில்லை இயேசு இருப்பதினால் கவலையில்லை இது வெறும் வார்த்தையில்லை வெட்டிப்பேச்சு இல்லை ருசித்துப்பார்த்தவர்க்குப் புரியும் இது இயேசுவை ரசித்துப் பார்த்தவர்க்குத் தெரியும் இது-2
ஆரம்பம் அற்பமானாலும் முடிவு (சம்பூர்ணமாகும்)-2 காலங்கள் கடந்து போனாலும் காத்திருந்தால் (புது பெலனுமாகும்)-2 நாளை தினம் குறித்து கவலையில்லை நடுத்தெருவில் நிற்கத் தேவையில்லை-2 இது ஆசை வார்த்தையில்லை ஆள் சேர்க்கவில்லை அனுபவித்தவரின் சாட்சி இது இயேசுவை அறிந்து கொண்டவரின் பேச்சு இது-2
பலவீனம் அது வந்த போதும் தேவ கிருபை பெலன் அது (நமக்கு போதும்;)-2 எதிராளி நம்மைச் சூழ்ந்த போதும் அவர் நமக்காக செய்யும் (யுத்தம் போதும்)-2 எந்த சூழ்நிலைக்கும் கலக்கமில்லை இதெல்லாம் நினைக்க துளி நேரமில்லை-2 இனி முறு முறுப்பு இல்லை புலம்பல் அறிக்கையில்லை எதுவும் அவர் சுமக்கும் பாரம் இது எதற்கும் துதி செலுத்தும் நேரம் இது
விருதாவாய் தன்னைத் தேடவேண்டுமென்று யாருக்கும் (அவர் சொன்னதில்லை)-2 பெரிதான இரட்சிப்புத் தரவேண்டுமென்று எளிதாக நீதி (பேசும் தெய்வம்)-2 அவரே கர்த்தர் வேறொருவர் இல்லை அவரைத்தவிர யாரும் தேவன் இல்லை அவர் வேறு யாரும் இல்லை வெகு தூரம் இல்லை உனக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் உன்மேல் நேசம் வைத்த இயேசுவானவர்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal