பொன்னகர்ப் பயணம்
ponnagarp payanam
பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே, - மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.
1.உன்னத சுதனுக் கேதும் ஒப்புமையுண்டோ? - அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மையருமை. - பொன்
2.லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே; - அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. - பொன்
3.வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் - இன்று வந்தழைத்துப் போகுமேன்மைமாந்தருக் குண்டோ? - பொன்
4.மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும், - யேசு, தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. - பொன்
5.கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் - சென்றோர் நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். - பொன்
6.ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு - புதுப் பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். - பொன்
7.கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று - சொல்லும் உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? - பொன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal