போனாபோகுதுன்னு உயிரோட
ponaabogudhunnu uyiroda
போனாபோகுதுன்னு உயிரோட என்ன வச்சிருக்காரு எங்க இயேசு வச்சிருக்காரு எங்க இயேசு அந்த மன்னாதி மன்னவரு முன்னால என்னைக்குமே மத்ததெல்லாம் வெறும் தூசு
பாடையைத் தொட்டதும்.. பரமன் கை பட்டதும்-2 செத்துப்போன மகன் கெத்தா பொழைச்சான் ஆடையைத் தொட்டவுடன்.. ஆண்டவர் திட்டமுடன் பன்னெண்டு வருஷ பாடு பஞ்சா பறந்திச்சு
கானாவூர் வீட்டில கடைசி நேரத்துல கலக்கினாரு எங்க இயேசு கலக்கினாரு எங்க இயேசு இந்த வானாதி வானங்கள உண்டாக்கி வச்சவரு செய்வதெல்லாம் செம மாஸ்
கஷ்டப்பட்டு தயங்கின...குஷ்டரோகிகளைஎல்லாம்-2 இஷ்டப்பட்டு தொட்டு சுகம் கொடுத்தவரு முப்பத்தெட்டு வருஷமா.. முடங்கிக் கிடந்தவன எழுப்பி நடக்க வச்சதெல்லாம் அவர் பவரு
கல்லறையில் வச்சவன கூப்பிட்டு உயிர்கொடுத்து புல்லரிக்க வச்சவரு இயேசு புல்லரிக்க வச்சவரு இயேசு அந்த நல்லவர வல்லவர நம்பியாரும் கெட்டதில்ல என்னைக்கும் இயேசுதான் Boss (பாஸ்)
அடிதடி இல்லாம....ஆரவாரம் பண்ணாம-2 உடனடி சுகத்த கொடுத்து ரசிச்சவரு மறுப்பேதும் சொல்லாம..மனசு சலிக்காம பாவியின் வீட்டிலே போஜனம் புசிச்சவரு
எல்லார் மனசிலேயும் இடம் புடிச்சவரு இயேசுதாங்க இங்க டாப்பு-நம்ம இயேசுதாங்க இங்க டாப்பு இந்த மண்ணான மனுஷன பொன்னாக மாத்துற இயேசு நாமம்தான் safe (சேஃபு) சும்மா மத்ததெல்லாம் வெறும் டூப்பு
சுத்து போட்ட பிசாசுக்கு... பத்துபோட வச்சவரு-2 பத்திரமா உன்ன பாத்துக்குவாரு சொத்து பத்து அத்தனையும் நீ மட்டும் தான் அவர்க்கு கூட்டிக் கழிச்சுப்பாரு சரிவரும் கணக்கு
சொந்தம் கொள்ள வந்தவர முந்திக்கொண்டு சந்திக்கிற கிருபை பெற்றவன்தான் வாசி அந்தக் கிருபை உனக்கிருக்கா யோசி இந்த வழி சத்யம் ஜீவன வல்லமையின் தேவன உள்ளத்துல வச்சு இன்னும் நேசி நல்லா உக்காந்து பைபிள வாசி
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal