பெந்தெ கொஸ்தின் ஜீவியமே
pendhe kosthin jeeviyamae
பெந்தெ கொஸ்தின் ஜீவியமே பாரில் பாக்கியம் ஆன ஜீவியமே
பரலோக நாதன் பாரினிலே அவதரித்ததின் காரணமே - 2 பெந்தெ கொஸ்தின் அனுபவம் - 2 மானிடர் யாவரும் அடைந்திடவே
பெந்தெகொஸ்தே அனுபவம் என்றால் கருத்தை நன்றாக அறிந்திடுவாய் - 2 ஆன்மீக வாழ்வின் அனுபவம் ஆவிக்குரிய ஜீவியமாம் - 2 மகிமை அடைந்த ஜீவியமாம் - 2 பரலோகத்திற்கேற்ற ஜீவியமாம்
கிறிஸ்துவின் சரீர வாழ்க்கையிலே உலகத்தில் இருந்த காலத்திலே - 2 வெளிப்பட்ட ஜீவியம் தானே பெந்தெகொஸ்தின் அனுபவமே - 2 மானிடர் யாவரும் பெற்றிடவே - 2 மானிலத்தில் அதைக் காண்பித்தாரே
கிறிஸ்து சீடரை அழைத்ததுமே அனுபவத்தை கற்றுக் கொடுத்திடவே - 2 சீடரைக் கொண்டு நடந்ததுமே அடிக்கடி போதனை கொடுத்ததுமே பெந்தெகொஸ்தே அனுபவத்தை - 2 அடைந்திட தகுதிப் பட்டிடவே
கெத்சமனே தோட்டம் முதல் கல்வாரி மலை தான் வரைக்கும் - 2 அவர் திரு இரத்தம் சிந்தினதின் நோக்கம் என்ன அறி மானிடனே - 2 பாக்கியமான ஜீவியத்தை - 2 பாரினில் ஸ்தாபித மாக்கிடவே
கிறிஸ்து நொறுக்கப்பட்டது ஈன சிலுவை சுமந்தது - 2 குருசினில் அடிக்கப்பட்டதுமே மூன்றாணியில் தொங்கி மரித்ததுமே - 2 மூன்றாம் நாள் உயிரோடெழுந்ததுமே - 2 மானிடர் யாவரும் பெற்றிடவே
வாக்குத்தத்தத்தின் வல்லமையாம் உன்னதத்தின் பெலனிதுவாம் - 2 காத்திருந்து பெற்றிடவே கட்டளை கொடுத்தார் சீஷருக்கு - 2 காத்திருந்தார் நூற்றிருபதுபேர் - 2 ஐம்பதாம் நாளதில் அடைந்தனரே
அன்னியபாஷை அடையாளமாம் சரீர அசைவும் அடையாளமாம் - 2 பரிசுத்த வாழ்க்கைக்கு வல்லமையாம் பரிசுத்தவான்களின் அதிகாரம் - 2 விசுவாசத்திற்கு ஆரோக்கியம் - 2 சத்தியத்திற்குள் நடந்திடும் ஜீவியமாம்
பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்து ஜீவிக்கும் அனுபவமாம் - 2 பாவம் அற்ற ஜீவியம் பரிசுத்த வாழ்க்கையின் ஜீவியம் - 2 நற்சாட்சி பெற்றிடும் ஜீவியமாம் - 2 நாதரைக் காண்பிக்கும் ஜீவியமாம்
பரிகாசம் நிந்தை சகித்திடும் ஜீவியம் உபத்திரவம் பொறுத்திடும் ஜீவியம்! - 2 சத்ருவை சினேகிக்கும் ஜீவியமாம் பிறர் மேல் அன்பு கூரும் ஜீவியமாம் - 2 ஒரு குளத்தில் அறைந்திடுவோர்க்கு - 2 மறு கன்னத்தைக் காண்பிக்கும் ஜீவியமாம்
யாவரும் அதை பெற்றிடவே தேவன் அழைக்கிறார் வந்துவிடுங்கள் விசுவாசத்துடன் வந்திடுங்கள் கேட்டு அதனைப் பெற்றிடுங்கள் - 2 கேட்கிறேன் பெறுவான் என்றனரே - 2 வாக்கு மாறா வல்லவரே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan