பத்து மாதம் சுமந்து பெற்ற
pathu maadham sumandhu petra
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயுமில்லை தோளின் மீது சுமந்து நடந்த தந்தையுமில்லை பிரியமாய் மனமுடித்த கணவனில்லை பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகள் அருகில் யாரும் இல்லை என்றாலும் நேசருண்டு என்றைக்கும் ஜீவிக்கிறார் இயேசு உண்டு
1.சூழ்நிலை உனக்கெதிராய் மாறிப்போனாலும் தோல்வி என்று உனக்கு தெரிய வந்தாலும்-2 பாதை மாறிய பயணம் தடம் புரண்டாலும் கொடுப்பேன் என்று சொல்லி கைவிட்டாலும்-2 உன்னை கைவிடாதவர் இயேசு ஒருவரே உன் கதறலைக் கண்டு வந்து உதவிடுவாரே -2
2. ஊமையை பேச செய்த தேவன் எனக்குண்டு செவிடனைக் கேட்க செய்த ராஜன் உனக்குண்டு -2 முடவனை நடக்க செய்த கர்த்தர் உனக்குண்டு குருடனை பார்க்க செய்த இயேசு உனக்குண்டு -2 மீனின் கண்ணீர் அவர் அறிந்த இவரல்லவா உன் கண்ணீரின் அளவை அவர் மறந்திடுவாயோ-2
3.என்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் உனக்காய் உயிர்த்தெழுந்த சர்வவல்லவர்-2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் என்னோடிருப்பவர் கிருபையும் நன்மையும் தந்து பாதுகாப்பவர்-2 விசுவாசத்தோடு நீ நன்றி சொல்லிட்டு நன்மை செய்த இயேசுவுக்கே என்றும் துதி பாடிடு -2
4. கருவினில் தெரிந்துக் கொண்ட தாயும் அவரே கை பிடித்து நடத்தி வந்த தந்தையும் அவரே -2 நேசமாய் மணந்த மணவாளன் அவரே பாசம் காட்டி அரவணைத்த குமாரனும் அவரே-2 உன் நினைவு களெல்லாம் அறிந்தவர் இயேசு அதை என்றும் உணர்ந்து நீ அவரிடம் பேசு-2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal