பரிசுத்தர் இரத்தம் சிந்தும்
parisuthar iratham sindhum
பரிசுத்தர் இரத்தம் சிந்தும் பரிதாபக் காட்சி - 2 பார்மனமே பாதகராம் மானிடர்க்காக - 2
வேதனையுடன் வேண்டுதல் செய்யும் நேரத்தில் - 2 இரத்தம் சிந்தும் காட்சியைப்பார் அதோ மனமே - 2
ரத்த வேர்வையாலே திரேகம் மெத்தநனைந்து - 2 பாடுபடும் காட்சியைப்பார் அதோ தோட்டத்தில் - 2
துஷ்டர் கூடி தாடி ரோமம் பிடுங்கும் நேரத்தில் - 2 தரணியின் மீட்புக்காக இரத்தம் சிந்தினார் - 2
ஆசை நேசர் அவனிதனில் பாவிகட்காக -2 இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2
வாரினால் அடித்து கதை வதைக்கும் நேரத்தில் - 2 அருமை இயேசு அவனிதனில் இரத்தம் சிந்தினார் - 2
பாவியே நீ பாருனக்காய் பரிசுத்தர் இயேசு - 2 இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2
சிரசினில் முள்முடி சூட்டி மூங்கில் தடியால் - 2 அடிக்கும் வேளை இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2
மானிடர்க்காக மாசற்ற தேவாட்டுக்குட்டி தன் - 2 இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் நீ மனமே - 2
கொல்கத்தாவின் குருசினில் மூன்றாணியில் தொங்கி - 2 துடி துடித்து இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan