பரிசுத்தாவி நீர் வாரும்
parisuthaavi neer vaarum
பரிசுத்தாவி நீர் வாரும்! - திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்! - இன்று
அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி
1.செயல்குண வசனத் தீதுகள் போக, திருச்சபை யதிலிவர் பூரணராக, ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக, ஜெபதப தியானஞ் செய்வதற்காக. - பரி
2.நற்கருணைதனை நலமுடன் வாங்க, நாளொரு மேனியாய் ஆவியி லோங்க, சற்குணராய் இவர் சபையைக்கை தாங்க, சகல தீதான பேதங்களும் நீங்க. - பரி
3.அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய அருண்மறை யதினாழங் களையறிய, நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய, நின்னடியாரிவ ரென்பது தெரிய. - பரி
4.பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய, பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய, நித்தமுங் கிருபையின் கனி கொய்ய, நிலைவரமாய் இவராவியில் துய்ய. - பரி
5.தினமறை யோதி ஜெபித்து மன்றாட, திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட, உணர்வொடு தொழுது கீதங்கள் பாட, உள்ளத் திருந்து ஜீவாறுகளோட. - பரி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal