பணிந்து நடந்து
panindhu nadandhu
பணிந்து நடந்து கொண்டாரே__பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்தி எதிர்முனைந்து சொல்லாதபடி
1.தந்தை தாய் தனை மதித்து__அவருடைய தயவின் சித்தத்துக் கமைந்த மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்பாடி,
2.தந்தைக் குகந்த வேலையில் __ அவருடனே விந்தை யுடனே பயின்றார்; நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல் எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப்
3.ஆவி பலமடைந்தார்; உலக தேவ அறிவிலும் நிறைவு கொண்டார்; தேவ கிருபையிலும் திருமறை முறையிலும் பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி,
4.பாவம் ஒன்று தவிர நம்மைப் போலப் பாடுள்ளவராய் நின்றாரே; நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்; பாவி அவரைக் கண்டு பயிலுவது நன்று
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal