பண்டிகை கொண்டாடுவோம்
pandigai kondaaduvom
பண்டிகை கொண்டாடுவோம் ஆம் நாம் பண்டிகை கொண்டாடுவோம்
1.பண்டிகை கொண்டாடுவோம் பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி - பண்டிகை
2.புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி உண்மை பரிசுத்தமாம் உய்ர்மா வைப்பலுக்கி - பண்டிகை
3.இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை பூண்டாள்வ தில்லையே - பண்டிகை
4.தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப் படிபிழைத் திருக்கிறார் - பண்டிகை
5.நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக - பண்டிகை
6.கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டே யெழுந்து முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே - பண்டிகை
7.மனுஷனாலு லகினில் மரணமுண் டானதால் மனுஷனாலே யுயிரெழில் மகிமையுண்டானதே - பண்டிகை
8.ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே நாதனால் மெய்யாக நாமுயி ரடைகுவோம் - பண்டிகை
9.ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே - பண்டிகை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal